ஈரோடு மாவட்டம் எங்கு பார்த்தாலும் பசுமை…
காவிரி, பவானி ஆறுகள் மேல் பவானி, கீழ்பவானி வாய்க்கால்களாக மாவட்ட முழுவதும் ஓடிக்கொண்டே இருக்கிறது..மஞ்சள் நகரம் என்று உலகமே போற்றி வியக்கின்றது..
நெல், வாழை ,கரும்பு என்று எங்கு பார்த்தாலும் விவசாயம் செழித்தோங்கி இருக்கிறது..ஈரோடு மிகப்பெரிய தொழில் நகரமாகவும் விளங்கிக் கொண்டிருக்கின்றது.கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும் என்ற பழமொழியை எல்லா பக்கமும் நாம் சொல்லிக் கொண்டே இருக்கிறோம்…
கொங்கு எப்போது செழிக்க ஆரம்பித்தது யாருக்காவது தெரியுமா…
கொரோனா காலகட்டத்தில் ஊருக்கு நான் வந்திருந்த போது எனது அப்புச்சி சாப்பாட்டை கையில் எடுத்து கண்களில் ஊற்றி ஈஸ்வரா என்று சொல்லிக் கொண்டே சாப்பிட ஆரம்பித்தார்..
“நான் கூப்பிடறது கொடுமுடி ஈஸ்வரன் இல்ல இது வேற ஈஸ்வரன்…
இந்த பூமியில் இப்படியா இருந்துச்சு ..என்று ஆரம்பித்தார்
1940 கால கட்டங்களில் இந்த மண் ஒரு மேட்டாங்காடாய் இருந்திருக்கிறது..
இதோடு
தாது வருட பஞ்சமும் சேர்ந்து கொள்ள மக்கள் பரிதவித்துப் போனார்கள்..விவசாயத்திற்கு காலிங்கராயன் வாய்க்காலும் காவிரி ஆற்று பாசனமும் தவிர வேறு கதி இல்லாமல் இருந்திருக்கிறது..
இதை வைத்து பத்தாயிரம் ஏக்கர் மட்டுமே பாசனம் செய்ய முடிந்திருக்கிறது.இங்கு வாழும் மக்கள் பிழைப்புக்காக வெளியூர்களில் வேலை தேடி சுற்றித் திரிந்த அவலம் இருந்திருக்கிறது..நாடு வெள்ளையர்கள் பிடியில் கொள்ளை போய்க்கொண்டிருந்திருக்கிறது..இந்த நாடு விடுதலை பெற வேண்டும்..இந்த மண்ணும் மக்களும் ஒரு செழிப்பான வாழ்க்கை வாழ வேண்டும்..இது எல்லாம் நடந்தேற வேண்டுமானால் நாம் களத்தில் இருக்க வேண்டும் என்ற சிந்தனையில்.. ஒருவர் இறங்குகிறார்தன் உயர்கல்வி படிப்பை தூக்கி எறிகிறார்…தன் கால் செருப்பை கழட்டி வீசுகிறார்..
திருமணத்தை துறந்து வீரத் துறவு மேற்கொள்ளுகிறார்…தனக்கு இருந்த சொத்துக்களை எல்லாம் பூமிதான இயக்கத்திற்கும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் செயல்பாடுகளுக்கும் தானம் செய்கிறார்..
பல்வேறு போராட்டங்களில் கலந்து கொள்கிறார் தன் வாழ்வில் பாதி நாட்களை சிறையில் கழிக்கிறார் வைக்கம் போராட்டத்தில் கலந்துகொண்டு அடி உதைபட்டு கழுத்து நரம்பு அறுபட்டு தன் இறுதிக் காலம் வரை தலையை தொங்க போட்டுக் கொண்டு வாழ்ந்திருக்கிறார்.அவருடைய கனவுகள் ஒவ்வொன்றாக நிறைவேற தொடங்குகிறது..நாடு விடுதலை பெறுகிறது..இவருடைய மக்கள் பணியையும் தியாகத்தையும் பார்த்து இவரை எதிர்த்து ஒருவரையும் போட்டியிடாமல் இருக்க செய்த மக்கள் ஈரோட்டில் முதல் சுயேச்சை சட்டமன்ற உறுப்பினராக இவரை தேர்ந்தெடுக்கப்படுகிறார்.தன்னுடைய ஒரு ஓட்டை துருப்புச் சீட்டாக பயன்படுத்தி இந்த மண்ணிற்கு பவானிசாகர் அணை என்ற ஆசியாவின் இரண்டாவது பெரிய அணையை உருவாக்க அடித்தளம் இடுகிறார்..
இவருடைய கோரிக்கை நிராகரிக்கப்பட தன்னுடைய பதவியை ராஜினாமா செய்து சென்னை ராஜதானி முதலமைச்சர் பிரகாசம் தந்தூரியை அலறவிடுகிறார்.
பிரகாசம் தந்தூரி ஈரோட்டிற்கே வந்து இவரை சமாதானப்படுத்தி இவரது கோரிக்கையை நிறைவேற்றி பவானிசாகர் அணைக்கான கட்டுமான பணியை தொடக்கி வைத்தார்..
அணை கட்டுமானப் பணி தொடக்க முதல் நிறைவு வரை அத்தனை இன்னல்களையும் சந்தித்து தொடங்கும் வரை
தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தன் செயல்கள் வெற்றி பெற எல்லா புறக்கணிப்புகளையும் ஏற்றுக் கொள்ளுகிறார்..அவர் உருவாக்கிய அணை திறப்பு விழாவிற்கு அவருக்கே அழைப்பில்லை என்றாலும் மக்களுக்காகவே தொண்டாற்றுகிறார்..இன்று ஈரோட்டில் எல்லா பெரிய மனிதர்களுக்கும் சிலைகள் இருக்கிறது…எல்லா தலைவர்களின் பெயர்களிலும் ஏதோ ஒரு நினைவு சின்னங்கள் இருக்கிறது..
இப்படி ஊருக்கு உழைத்த ஒரு மனிதனை நினைவில் வைக்காமல் பெயர் கூட தெரியாமல் வாழ்ந்து இருக்கிறோம் என்பது எவ்வளவு வேதனையானது…
ஆம்..
அர்த்தநாரீஸ்வர ஈஸ்வரன் என்ற மாமனிதனின் பெரும் தியாகத்தில் தான் நாம் இங்கு செழிப்பான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிரோம்..
எனது அப்புச்சியை போல் ஒவ்வொரு விவசாயியும் தன் நெஞ்சில் வைத்து போற்றும் இந்த மாமனிதனை ஏன் ஈரோட்டு மக்கள் தெரிந்து கொள்ளவே இல்லை இவரை எப்படியும் வெளிக் கொண்டு வந்து விட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் எனது சக்ரா பவுண்டேஷன் முழுமையாக முழுமையாக களத்தில் இறங்கியது..
ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை தவிர அவரைப் பற்றி வேறு எந்த தகவல்களும் எங்களுக்கு கிடைக்கவில்லை
தொடர்ச்சியாக பல்வேறு மனிதர்களை சந்தித்து தகவல்கள் சேகரிக்க சேகரிக்க பல்வேறு ஆச்சரியங்களும் அனுபவங்களும் எங்களுக்கு கிடைத்தது
அதை முழுமையாக்கி ஈஸ்வரம் என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை உருவாக்கி மிகச் சிறந்த முறையில் வெளியீடு செய்தோம்.
அந்த புத்தக வெளியீட்டு விழா நிகழ்வின் விவசாய சங்கங்கள் இன்னும் பல்வேறு அமைப்பினர்கள் முழுமையாக கலந்து கொண்டு ஈஸ்வரனை கொண்டாட ஆரம்பித்தார்கள் மத்திய மாநில அரசின் அங்கீகாரங்களை முழுமையாக ஈஸ்வரன் அய்யாவிற்கு கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு முயற்சிகள் எடுத்துக் கொண்டே இருந்தோம் ஈஸ்வரன் ஐயாவின் பெயரை எப்போதும் ஈரோட்டு மக்கள் கேட்டுக் கொண்டும் உச்சரித்துக் கொண்டும் இருக்க வேண்டும் என்றால் அதற்கு ஈரோடு ரயில் நிலைய சந்திப்பிற்கு அவரது பெயரை வைத்தால் மட்டுமே சாத்தியம் என்ற அடிப்படையில் பாரதப் பிரதமர் அவர்களை புது தில்லியில் சந்தித்தோம் ஐந்து நிமிட சந்திப்பு இந்த உணர்வுக்கு உணர்வு மிக்க மாமனிதனின் கதையை கேட்ட பின்பு 45 நிமிடமாக மாறியது…
நிறைய ஆலோசனைகளை வழங்கி எங்களை பாராட்டிய பிரதமர் அவர்கள் இப்போது சாத்தியப்படுத்தி இருக்கிறார்.
பாரதப் பிரதமரின் ஆலோசனைப்படி ஈஸ்வரன் வரலாறு தமிழிலிருந்து ஆங்கிலம், ஹிந்தி மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு விரைவில் வெளியாக இருக்கிறது..
அவரின் திருவுருவச் சிலையும் புடைப்புச் சிற்பமாக அமைக்கப்பட இருக்கிறது…
மறைக்கப்பட்ட ஒரு மாமனிதரின் வரலாற்றை மீட்டெடுக்கும் எங்கள் பணி வெற்றி அடைந்திருக்கிறது.
ஒரு மாமனிதருக்கு புகழ் சேர்க்கும் உன்னதமான அறிவிப்பை அறிவித்த திரு அண்ணாமலை அவர்களுக்கும் மற்றும் என்னோடு இணைந்து பணியாற்றிய அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் இந்த வேலையில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் . மேலும் சக்ரா விஷன் இந்தியா பவுண்டேஷன் சார்பாக இந்தியாவில் 75 புகழ்பெற்ற இடங்களில்1040 புகழ்பெற்ற அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயர்களை தாங்கி நிறுவப்பட இருக்கின்ற தியாகப் பெருஞ்சுவரிலும் ஈஸ்வரன் ஐயாவை இடம் பெறச் செய்திருக்கிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
தியாகி எம் ஏ ஈஸ்வரன் அவர்களை அனைவரிடமும் கொண்டு போய் சேர்க்கும் முயற்சியில் சக்ரா அறக்கட்டளை பல்வேறு கொண்டாட்டங்களை முன்னெடுத்தது.
ஈஸ்வரம் என்ற தலைப்பில் அவருடைய வாழ்க்கை வரலாறு புத்தகமாக வெளியிடப்பட்டது.
திரைப்பட இயக்குனரும் சக்ரா அறக்கட்டளை நிறுவனருமான எழுத்தாளர் திரு சக்ரா ராஜசேகர் அவர்கள் இந்த புத்தகத்தை எழுதி இருக்கிறார்கள்.
தியாகி எம் ஏ ஈஸ்வரன் ஐயா அவர்கள் தான் வாழ்ந்த காலம் முழுவதும் கருங்கல்பாளையம் பகுதியில் சுதந்திர தின விழா குடியரசு தின விழாவை அந்தப் பகுதி குழந்தைகளுடன் இனிப்பு வழங்கி கொண்டாடியுள்ளார்.
சக்ரா அறக்கட்டளை ஒவ்வொரு வருடமும் மாணவர்களை இணைத்து அதே பகுதியில் ஈஸ்வர சுடர் ஏந்தி குடியரசு தின விழா மற்றும் சுதந்திர தின விழாவை கொண்டாடி வருகிறது.
விழாவில் கலந்து கொள்ளும் மாணவச் செல்வங்களுக்கு விளையாட்டு ஓவியப் போட்டிகள் நடத்தி பரிசுகளையும் வழங்கி வருகிறது.
தியாகி எம் ஏ ஈஸ்வரன் வாழ்க்கை வரலாற்று புத்தக வெளியீட்டு நிகழ்வில்
ஈஸ்வரன் ஐயாவிற்கு திருஉருவச் சிலை நிறுவுதல்
ஈரோடு ரயில் நிலையத்திற்கு ஈஸ்வரன் ஐயாவின் பெயர் சூட்ட முயற்சி எடுப்பது.
ஈஸ்வரன் ஐயாவிற்கு தபால் தலை வெளியிட முயற்சி எடுப்பது.
ஈஸ்வரன் ஐயா பெயரில் மிகப்பெரிய வேளாண் அருங்காட்சியகம் ஒன்றை ஈரோட்டில் அமைப்பது.
என்று சூளுரையை சக்ரா ராஜசேகர் அவர்கள் வழங்கினார்கள்.
அதன் நீட்சியாகவே பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு சிலை அமைக்கும் பணியும் தொடங்கப்பட்டு இருக்கிறது.
அதைப் போலவே ரயில் நிலையத்திற்கு ஈஸ்வரன் அய்யாவின் பெயர் சூட்டுவதற்கான ஒப்புதலும் பெறப்பட்டிருக்கிறது.
ஈரோட்டில் உள்ள அனைத்து பெருமக்களின் பேரன்போடு இதற்கான முன்னெடுப்பை சக்ரா அறக்கட்டளை செய்து வருகிறது
M.A Easwaran
“பாசனத்” தந்தை தியாகி
M A ஈஸ்வரன்

M.A Easwaran Documentary Film
ஈஸ்வர சுடரேந்தல்

எண்ணிய முடிதல் வேண்டும் நல்லவே என்னல் வேண்டும்
News