Chennai, India chakravif@gmail.com +919962716812

VOC 150

சக்ரா அறக்கட்டளையின் வ உ சி 150 கொண்டாட்டங்கள்

இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் தனிப்பெரும் சொல்லாய் விளங்கியவர் வ .உ .சிதம்பரனார் அவர்கள்.
ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து பல்வேறு வகையான போராட்டங்கள் நடந்து கொண்டிருந்த பொழுது எவருமே சிந்திக்க முடியாத புது வியூகத்தை வகுத்தவர். வணிக நோக்கத்திற்காக உள்ளே நுழைந்த வெள்ளையனை அதே வணிகத்தின் மூலம் வெளியேற்ற கடல் வணிகத்தை மீட்டு எடுக்கும் முயற்சியை மேற்கொண்டார். சுதேசிய சிந்தனைகளை வளர்க்கவும் சுதேசிய கைத்தொழில்கள் மூலம் தற்சார்பு பொருளாதாரத்தை மேம்படுத்துவதன் மூலம் பெரும் மாற்றத்தை நிகழ்த்த முடியும் என்ற தீர்க்கமான சிந்தனையில் துவங்கப்பட்டதே சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி முதன்முதலில் வெளியிட்டு மக்களை பங்குதாரர்களாகவும் சுதேசிய சிந்தனைகளை அவர்கள் ஆழ் மனதில் விதைத்து பொருளாதார போராட்டத்தை நிகழ்த்திக் காட்டியவர் கப்பலோட்டிய தமிழன் வ உ சி அவர்கள்.
இப்படி மேலோட்டமாக மட்டுமே வ உ சி அவர்களைப் பற்றி அறிந்து வைத்திருக்கிறோம் அவரைப்பற்றி வெளிவராத , பல விடயங்களை மா பொ சி,
இரா. வெங்கடாசலபதி ஆ .சிவசுப்பிரமணியன்
ரெங்கையா முருகன் போன்ற மிகச்சிறந்த ஆய்வாளர்கள் பல கட்டுரைகளை எழுதி எழுதி இருக்கிறார்கள் ஆனால் வெகுசனங்களிடம் இச்செய்திகள் எந்த அளவிற்கு போய் சேர்ந்திருக்கிறது என்று தெரியவில்லை இளைய தலைமுறையினருக்கு மீண்டும் இந்த மகத்தான மனிதரை கொண்டு சேர்க்கும் பெரும் பொறுப்பு நம் எல்லோருக்கும் இருக்க வேண்டும்…. என்பது சக்ரா அறக்கட்டளையின் நோக்கம் ஆகும்.
சக்கர அறக்கட்டளை நமது கலாச்சாரம் ,பண்பாடு மற்றும் இயற்கை நலன்களை
இயற்கை வளங்களை பாதுகாத்து அதன் தொன்மையை இளைஞர்களிடமும் மாணவர்களிடமும் கொண்டு சேர்க்கும் பெரும் பணியை செய்வதற்கென்றே என்னால் துவங்கப்பட்டது..
திரைப்படத்துறையில் இயக்குனராக இருந்தாலும் 19 வயதிலேயே இந்தியா டுடே நேஷனல் ஜியாக்ரபி பிபிசி போன்ற ஊடகங்களில் செய்தியாளர் ஆகவும் ஆவணப்பட இயக்குனராகவும் மரபு ,கலை, இலக்கியம் என பல்வேறு தளங்களில் எனது பயணம் பரந்து விரிந்து சென்று கொண்டிருந்தது.
கொரோனா பெரும் தொற்று காலத்தில் என்னுடைய பிறந்த ஊரான ஈரோடுக்கு அருகிலுள்ள அவல்பூந்துறை சென்றிருந்தேன்..அப்போது எனது நண்பர் மணி கிருஷ்ணன் அவர்கள் வ வு சி உயில் என்ற புத்தகத்தை கொடுத்துச் சென்றார்..
அதை வாசிக்கும் பொழுது மனம் ரணம் ஆனது..
அறம் சார்ந்த அவரது வாழ்க்கையை பற்றி வெளிவந்த பல்வேறு புத்தகங்களை வாசிக்க வாசிக்க என்னுள் முழுமையாய் நிறைந்து நின்றார்
வ உ சி அவர்கள்..
நான் கண்ட வ ஊ சி தரிசனங்களை நட்பு வட்டத்தில் பேசும்பொழுது 2020 நவம்பர் 18 அன்று வரும் வ உ சி அவர்களின் நினைவு தினத்தை சக்கர அறக்கட்டளை மற்றும் விதை வெளியீடு மூலம் மிகச் சிறந்த முறையில் கொண்டாட முடிவு செய்து தமிழ் பெருஞ் சொல் வவுசி என்ற பெயரில் நிகழ்விற்கான ஏற்பாட்டினை செய்தோம் அந்நிகழ்வில் தமிழ் பெருஞ் சொல் வ வு சி என்ற பெயரில் விருது ஒன்றினை வழங்கவும் முடிவு செய்தோம் அந்த விருதினை பதிப்புத் துறையில் நூறு ஆண்டுகள் கடந்து இயங்கிக்கொண்டிருக்கும் சைவசித்தாந்த நூற்பதிப்பு கழகத்திற்கு வழங்குவது என்றும் வ. உ .சி சிறையில் இருந்து வெளிவந்தவுடன் அவருக்கு ஆதரவு கரம் நீட்டிய பேரூர் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் மடத்தின் மடாதிபதி தவத்திரு மருதாசல அடிகளார் அவர்களின் திருக்கரங்களால் வழங்குவது என்று முடிவு செய்து விழாவிற்கான ஏற்பாடுகளை தொடங்கியிருந்தோம்அரங்கினை உறுதி செய்து விட்டு அழைப்பிதழ் களையும் அனுப்ப தொடங்கியிருந்த நேரத்தில் மீண்டும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது அதனால் அந்நிகழ்வை 2021ம் ஆண்டு தொடங்கும் வ உ சி அவர்களின் 150வது ஆண்டு கொண்டாட்டத்தில் நடத்துவதற்கு முடிவு செய்தோம்.

வ .உ. சி யை பற்றிய முழுமையான ஆவணங்களை தொகுத்து வ.வு.சி பெட்டகம் என்ற பெயரில் வெளியிடுவது என்று முடிவு செய்தோம்.
75வது சுதந்திர தின கொண்டாட்டத்தில்
வ உ சி அவர்களை இந்தியாவெங்கும் கொண்டு சேர்க்கும் நோக்கில் தாய் மண்ணே வணக்கம் என்ற இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானின் இசை தொகுப்பைப் போல் பெருங்காற்று என்னும் இசைத் தொகுப்பை இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் அவர்களைக் கொண்டு உருவாக்கும் பணி மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தை முதலில் வரவேற்கும் விதமாக பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தி மிகப்பெரிய கவன ஈர்ப்பை ஏற்படுத்தினோம் இதன் பின்பு எங்களை தொடர்பு கொண்ட பல நல்ல உள்ளங்களின் வாழ்த்துக்களோடு
வ உ சி 150 கொண்டாட்டத்திற்கான முன்னெடுப்பை எல்லாத் தளங்களிலும் பரவலாக்கம் செய்து பெரும் கவன ஈர்ப்பை ஏற்படுத்தி னோம்..
மிகப்பெரிய முன்னெடுப்பில் ஆய்வாளர் திரு ரங்கையா முருகன் அவர்களின் சந்திப்பும் உணர்ச்சிமயமான உரையாடல்களும் முழுமையான தரிசனத்தை எங்களுள் நிகழ்த்தியது . அதன் விளைவே 113 ஆண்டுகளுக்குப்பின் திரு முயற்சிகளுக்குப் பின் உங்கள் கைகளில் கிடைத்திருக்கும் இந்நூல்..
என் முயற்சியின் எப்போதும் எனக்கு துணையாய் இருக்கும் நக்கீரன் பொறுப்பாசிரியர் கோ வி லெனின் அவர்களின் பங்களிப்பு அளவிட முடியாதது..

தொடர்ந்து நிறைய பயணங்கள் நிறைய சந்திப்புகள் நிறைய தகவல்கள் என்று நிறைய பொக்கிஷங்களை கண்டடைந்து அவற்றை முழுமையாக தொகுக்க தொடங்கினோம்.. இதை வெளிக்கொண்டுவரும் மகத்தான பணியில் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் திரு சுப்பையா அவர்களும் இணைந்து பெரும் பங்களிப்பை செய்து தந்தார் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கவனத்திற்கு எங்களின் முன்னெடுப்புகளை கொண்டு சேர்த்தும் இந்த புத்தகங்களுக்கான வாழ் துறையையும் பெற்றுத்தந்த கலைஞர் தொலைக்காட்சியின் தலைமை செய்தி ஆசிரியர்
திரு. திருமாவேலன் அவர்களின் பங்களிப்பு போற்றுதலுக்குரியது. இவர்கள் அத்தனை பேருக்கும் எனது அன்பும் நன்றியும்
எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லன
என்னல் வேண்டும்…
சக்ரா ராஜசேகர்

 

voc home
voc home

Thanapathi Pillai
Thanapathi Pillai hOME

Thanapathi Pillai
Thanapathi Pillai hOME

                                                                                               “

                    வ.உ.சி.வரலாற்றுச் சுருக்கம்

வரலாற்று ஆய்வாளர் திரு ரங்கையா முருகன் மற்றும் சக்ரா ராஜசேகர் இருவரும் இணைந்து பதிப்பாசிரியராக சேர்ந்து உருவாக்கிய மிக முக்கியமான ஆவண நூலாகும்

இந்த நூல் வ.உ.சி. 1908 ல் சிறையில் அடைத்த போது ஏற்கனவே சுதேசிய கப்பல் முயற்சி எடுத்தபோது பல்வேறு பத்திரிகைகளில் வந்த செய்தியை தொகுத்து எம்.கிருஷ்ணசாமி அய்யரால் ஆங்கிலத்தில் 1909 ம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதற்கு முன்னதாகவே தமிழில் 1908 ம் ஆண்டு தமிழில் வெளிவந்நது. முக்கியமாக இந்த சரித்திரம் தமிழக அரசியல் துறை சார்ந்த பிரமுகருக்கு வெளிவந்த முதல் சரித்திரம். இந்த நூலின் பிரதியை தமிழக நூலகத்தில் என்னால் காணமுடியாத சூழலில் லண்டன் பிரிட்டிஷ் நூலகம் இந்தியா ஆபிஸ் நூலகத்தில் இருந்து நண்பர் மூலமாக தருவிக்கப்பட்டதே.நாவிகேசன் கம்பெனி எவ்வளவு இடையூறுகளுக்கிடையே சுதேசி கம்பெனியை ஆரம்பித்தார் என்பதை அறிய அரிய ஆவணம்.

 

1908ஆம் ஆண்டு வெளியான வ.உ.சி. சரித்திரத்தில் நாம் அறியாத பல தனிகுணாம்சங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக அவரது வக்கீல் தொழிலில் எழை எளிய மக்களுக்காக மிகுந்த கருணை உள்ளத்துடன் நீதி பரிபாலனம் செய்து தருவது. கிரிமினல் வழக்குகளில் இவரது வாதத் திறமையால் கதிரிகளை சரண் அடைய வைப்பதிலும், வழக்குகளில் கட்சிக்காரர்கள் எவ்வளவு கொடுக்க சக்தியுள்ளவர் என்றறிந்து அதற்குத் தக்க வழக்குக்குரிய சன்மானம் வங்குவதையும், ஏழை எளிய மக்களுக்கு இனாமாக வாதிடுவதையும் சொல்லலாம். சுதேச முயற்சிக்காக தன்னையே கனப்பலி ஆக்குவதற்கு தயார்படுத்தி நூறு சதவீத சுதேச வழ்க்கையை மேற்கொண்ட அரிய குணாம்சத்தையும் பதிவு செய்கிறது இந்நூல், கப்பல் வாங்கும் பகீரத முயற்சிகள், கோரல் மில் வேலைநிறுத்தம் இராஜ நிந்தனை வழக்கு விபரங்கள், பின்ஹே தீர்ப்பு குறித்து அப்போதைய பல பத்திரிகை செய்திகள், பின்ஹே தீர்ப்பின் முக்கிய அம்சங்கள். கோவைச் சிறையில் நடந்த குழப்பங்களுக்கு செசன்ஸ் கோர்ட்டில் வடசி. சாட்சியம் அளித்தல் போன்ற பல முக்கியமான செய்திகளும் பதிவாகியுள்ளன